உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரவில் உலா வந்த யானை கடையை உடைக்க முயற்சி

இரவில் உலா வந்த யானை கடையை உடைக்க முயற்சி

பந்தலுார்;பந்தலுார் அருகே, நெலாக்கோட்டை பகுதியில் அடிக்கடி ஒற்றை ஆண் யானை உலா வருகிறது.இங்குள்ள விலங்கூர் என்ற இடத்தில் முகாமிடும் இந்த யானை விவசாய விளை பொருட்களையும் அடிக்கடி சேதப்படுத்தி வருகிறது. நேற்று இரவு பஜார் பகுதிக்கு வந்துள்ளது. அங்கு நாசர் என்பவருக்கு சொந்தமான பழக்கடையை உடைக்க முயற்சி மேற்கொண்டுஉள்ளது.பொது மக்கள் கூச்சலிட்டு யானையை அங்கிருந்து துரத்தி உள்ளனர். மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை முதுமலைக்கு பிடித்து செல்ல வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்