உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட உள்ளது.மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஆக., 15ம் தேதி சுதந்திர தின விழாவில், சிறப்பாக பணி புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்கு, 10 கிராம் தங்கப்பதக்கம், 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசுடன், சான்றிதழ் வழங்கப்படுகிறது. சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு, 10 கிராம் தங்கப்பதக்கம், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் சான்றிதழ், சிறந்த மருத்துவருக்கு, 10 கிராம் தங்கப்பதக்கத்துடன், சான்றிதழ் வழங்கப்படும்.மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு, 10 கிராம் தங்கப்பதக்கத்துடன், சான்றிதழ், சிறந்த சமூக பணியாளருக்கு, 10 கிராம் தங்கப்பதக்கத்துடன், சான்றிதழ் மற்றும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, 10 கிராம் தங்கப் பதக்கத்துடன் சான்றிதழ் வழங்கப்படும்.சிறப்பாக சேவை புரிந்த பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் வரும், 7ம் தேதிக்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ