உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்; விவசாயிகளுக்கு நஷ்டம்

காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்; விவசாயிகளுக்கு நஷ்டம்

பந்தலுார் : பந்தலுாரில் காற்றுடன் பெய்து வரும் மழையால் வாழை மரங்கள் சாய்ந்து நஷ்டம் ஏற்பட்டுள்து. பந்தலுார் பகுதியில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அவ்வப்போது காற்றும் வீசி வருகிறது. நேற்று வீசிய காற்றில் மணல்வயல் என்ற பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தது. இதனால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'ஏற்கனவே நெல் விவசாயம் மேற்கொண்டிருந்த நிலையில் மழையின் குறைவால், தற்போது வாழை விவசாயத்தில் ஈடுபட்டு உள்ளேன். கடன் வாங்கி விவசாயம் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது காற்றில் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,' என்றனர். பாதிக்கப்பட்ட பகுதியில் பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் தோட்டக்கலை துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்