உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அதெல்லாம் இருக்கட்டும்... ஆயிரம் ரூபாய் என்னாச்சு வேட்பாளர் ராஜாவிடம் பெண்கள் கேள்வி

அதெல்லாம் இருக்கட்டும்... ஆயிரம் ரூபாய் என்னாச்சு வேட்பாளர் ராஜாவிடம் பெண்கள் கேள்வி

அன்னூர்:நீலகிரி எம்.பி., யும், தி.மு.க., வேட்பாளருமான ராஜா, அன்னூர் தெற்கு ஒன்றியம் கெம்பநாயக்கன்பாளையத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.அவர் பேசுகையில், அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டை வரவிருந்தது. இதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாமல் இருக்க, தொழிற்பேட்டை வராமல் நான்தான் தடுத்து நிறுத்தினேன். நான், வாஜ்பாய், ஐ.கே.குஜ்ரால், தேவகவுடா, மன்மோகன் சிங், மோடி என பல பிரதமர்களின் ஆட்சியில் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். எனக்கு போட்டி அ.தி.மு.க., வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் மகன் தான். பா.ஜ., வேட்பாளர் எனக்கு போட்டி இல்லை, என்றார்.அப்போது கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பெண்கள், பிரசார ஜீப்பை சூழ்ந்து கொண்டு, 'அதெல்லாம் இருக்கட்டும்...எங்களுக்கு மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வரவில்லை, எங்கள் வீதியில் வசதியான சிலர், மாதம் ஆயிரம் ரூபாய் வாங்குகின்றனர். ஆனால் ஆறு மாதமாக தாலுகா அலுவலகத்திற்கு அலைந்தும், எங்களுக்கு கிடைக்கவில்லை' என சரமாரியாக புகார் தெரிவித்தனர்.இதை எதிர்பாராத ராஜா, ''பார்க்கிறேன், பார்க்கிறேன்,'' என்று கூறியபடி வேகமாக புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ