உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நடனமாடி ஓட்டு சேகரித்த பா.ஜ., வேட்பாளர்

நடனமாடி ஓட்டு சேகரித்த பா.ஜ., வேட்பாளர்

கோத்தகிரி;கோத்தகிரியில் நடனமாடி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, நீலகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு கிராம மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.நீலகிரி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முருகன் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர், தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் படுக இன மக்கள் வசிக்கும் கிராமங்களில், நடனமாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில், குன்னுார் சட்டசபைக்கு உட்பட்ட கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி, சோலுார்மட்டம், தேனாடு உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கு சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கோத்தகிரி பகுதிக்கு வந்த முருகன், கிராமத்தில் நடனமாடி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் பெண்கள்; சிறுமியர் நடனமாடினர். பின்னர் அந்த பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோவிலில் வழிபட்டார். அவருக்கு பல கிராம மக்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை