வனத்துறை வைத்த கூண்டு: போக்கு காட்டும் கரடி
குன்னுார்;குன்னுார் கரிமொரா ஹட்டியில் கூண்டில் சிக்காத கரடி, மீண்டும் வந்து செல்வது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.குன்னுார் உபதலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதி கரி மொராஹட்டி, கரோலினா பகுதிகளில் கடந்த மாதம் குடியிருப்பு பகுதிகளுக்கு உணவுக்காக கரடிகள் அடிக்கடி வந்து சென்றன.சில கடைகளின் கதவுகளை உடைத்து எண்ணெய் உட்பட உணவுகளை உட்கொண்டு சென்றன.இதை தொடர்ந்து, கரிமொரா ஹட்டியில் வனத்துறையினர் கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர்.எனினும், இந்த பகுதிக்கு வந்த கரடி கூண்டுக்குள் சென்று சிக்காமல் சென்றுள்ளது. மேலும், கரோலினா கிராமத்துக்கு வரும் கரடியை பிடிக்க இதுவரை கூண்டு வைக்கவில்லை.எனவே, இப்பகுதியில் உலா வரும் கரடிகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.