உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போலீஸ் - மின் வாரிய ஊழியர் கைகலப்பு:வைரலான வீடியோவால் பரபரப்பு

போலீஸ் - மின் வாரிய ஊழியர் கைகலப்பு:வைரலான வீடியோவால் பரபரப்பு

ஊட்டி;ஊட்டி மின்வாரிய அலுவலகத்தில் போலீஸ் ஒருவருக்கும், மின்வாரிய ஊழியருக்கும் இடையே கைகலப்பாகும் வீடியோ வைரலாகியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் பெய்த கன மழை, பலத்த காற்றுக்கு பெரும்பாலான பகுதிகளில் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரியம் சார்பில் துரித கதியில் சீரமைப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், புதுமந்து காவலர் குடியிருப்பில் உள்ள போலீஸ் சிவநாதன் என்பவர் நேற்று காலை ஊட்டி பஸ் ஸ்டாண்டில் உள்ள மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் குடியிருப்பில் மின்சாரம் துண்டிப்பு குறித்து தகவல் தெரிவிக்க சென்றார். அப்போது, மின்வாரிய ஊழியருக்கும், சிவநாதனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகும் 'வீடியோ' சமூக வலை தளத்தில் வைரலானது. இதில், கேங்மேன் வீரமணியை போலீஸ் சிவநாதன் தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால், மின்வாரிய ஊழியர்கள் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பணிகளை புறக்கணித்தனர். இது குறித்து மின்வாரிய ஊழியர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். பின், நடந்த பேச்சுவார்த்தையில் நடந்த சம்பவத்திற்கு போலீஸ் சிவநாதன் வருத்தம் தெரிவித்ததை அடுத்து ஊழியர்கள் பணிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை