மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க சிறப்பு ஏற்பாடு
19-Dec-2025
தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு
19-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
19-Dec-2025
கூடலுார்;கூடலுார் பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், வெப்பம் தணிந்து மிதமான காலநிலை நிலவுகிறது. இரவு; அதிகாலை நேரங்களில் ஏற்படும் மேகமூட்டம் வாகன ஓட்டுனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.கூடலுார் நகரில் மேகமூட்டம் படர்ந்து காணப்பட்டது. குளிர்ச்சியான கால நிலை நிலவியது. சில அடி தொலைவில் எதிரே வருபவர்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டுனர்கள் முகப்பு விளக்கை பயன்படுத்தி வாகனங்களை இயக்கினர்.போலீசார் கூறுகையில், 'மழையை தொடர்ந்து ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் இயற்கையாக மேகமூட்டம் ஏற்படும்போது வாகன விபத்துகள் ஆபத்து உள்ளது. எனவே, ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என்றனர்.
19-Dec-2025
19-Dec-2025
19-Dec-2025