உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொடர் மழையால் குளிரான காலநிலை: அப்பர்பவானியில் 3 செ.மீ., மழை

தொடர் மழையால் குளிரான காலநிலை: அப்பர்பவானியில் 3 செ.மீ., மழை

ஊட்டி;ஊட்டியில் நேற்று மாலை வரை தொடர்ந்த மழைக்கு குளிரான காலநிலை நிலவுகிறது.ஊட்டியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம், 1:00 மணிக்கு துவங்கிய மழை, மாலை வரை தொடர்ந்து பெய்தது. மழைக்கு நகரில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால், மழை நீருடன் கழிவுநீர் வெளியேறியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை, பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது. மழையால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணியர் மழையில் குடையை பிடித்து பூங்காவை ரசித்தனர். பிரதான புல் மைதானம், கண்காட்சிக்காக அமைக்கப்பட்ட மேடை பகுதியை சுற்றி சேறும் சகதியால் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. மழையால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிரான காலநிலை நிலவுகிறது. நகரில் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகளை அணிந்து வந்திருந்ததை காண முடிந்தது.

அப்பர்பவானியில் 3 செ.மீ., மழை

நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி அப்பர்பவானி, 30 மி.மீ., எமரால்டு, 20 மி.மீ., நடுவட்டம், 28 மி.மீ., கிளன்மார்கன், 37 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.மின் உற்பத்தி, பில்லுார் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நீராதாரம் மற்றும் மின்வாரிய குடியிருப்புகளுக்கு குடிநீர் ஆதாரமாக அப்பர்பவானி அணை உள்ளது. அங்கு, 3 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை