உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பத்திரப்பதிவுக்கு தடை துறை தலைவரிடம் நேரில் புகார்

பத்திரப்பதிவுக்கு தடை துறை தலைவரிடம் நேரில் புகார்

அன்னுார், : அன்னுார் சார் பதிவாளர் அலுவலகம் எல்லையில், 21 ஊராட்சிகள் மற்றும் இரு பேரூராட்சிகள் உள்ளன. கடந்த 15 மாதங்களாக அன்னுார் சார் பதிவாளர் அலுவலக பகுதியில் நத்தம் வகைப்பாடு நிலங்களை வாங்கவோ, விற்கவோ, அடமானம் செய்யவோ முடிவதில்லை. இதனால் அன்னுார் தாலுகா மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து தமிழக அரசுக்கும், மாவட்ட பதிவாளரிடமும் பலமுறை நேரிலும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் சுப காரியங்களுக்கு, மருத்துவ செலவுக்கு, வீடு கட்ட என பல்வேறு தேவைகளுக்கு பத்திரப்பதிவு செய்ய விரும்புவோர் 15 மாதங்களாக செய்ய முடியாமல் அலைமோதி வருகின்றனர்.இந்நிலையில் அன்னுார் பகுதியைச் சேர்ந்தநீடு அறக்கட்டளை சார்பில் தலைவர் மருதாசலம்மற்றும் நிர்வாகிகள், சென்னையில் உள்ள பத்திர ப்பதிவுத்துறை அலுவலக வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு குழு தலைவர் வாசுகியிடம் நேரில் மனு அளித்து, 15 மாதங்களாக, அன்னுார் தாலுகா மக்கள் படும் சிரமத்தை தெரிவித்தனர்.இது குறித்து கோவை மாவட்ட பதிவாளரிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பத்திரப்பதிவுத்துறை தலைவர் உறுதி அளித்தார் என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி