உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விலை உயர்ந்த மரங்களை வெட்டியதாக புகார் மாவட்ட வன அலுவலரின் விசாரணை அவசியம்

விலை உயர்ந்த மரங்களை வெட்டியதாக புகார் மாவட்ட வன அலுவலரின் விசாரணை அவசியம்

கூடலுார் : கூடலுார் சாலையோரங்களில் ஆபத்தான மரங்கள் என்ற பெயரில், விலை உயர்ந்த மரங்கள் வெட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.நீலகிரி மாவட்ட சாலையோரங்களில், பருவ மழை காலங்களில் மண் சரிவு ஏற்படுவதுடன், மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க சாலை ஓரங்களில் தடுப்பு சுவர் அமைத்தும், ஆபத்தான மரங்களை அடையாளப்படுத்தி அகற்றும் பணியும் நடந்து வருகிறது.அதன்படி, கூடலுார் கோழிக்கோடு சாலை, தேவர்சோலை சாலை ஓரங்களில், ஆபத்தான மரங்கள் கண்டறியப்பட்டு வருவாய்துறை உத்தரவு பெற்று வெட்டி அகற்றியுள்ளனர்.சில இடங்களில், ஆபத்தானது என அடையாளம் காட்டப்பட்ட, மரங்களுக்கு மாற்றாக விலை உயர்ந்த மரங்களை வெட்டி, வருவதாக புகார் எழுந்து.இந்நிலையில், தேவர்சோலை சாலை, சர்க்கார்மூலா (போலீஸ் ஸ்டேசன் அருகே) சாலையோரங்களில் ஏழு ஆபத்தான மரங்களை வெட்ட வருவாய் துறை சார்பில் அனுமதி வழங்கி, அடையாளம் கண்டு குறியீடு செய்தனர்.ஆனால், 'குறியீடு செய்யப்பட்ட மரங்கள் ஆபத்தான மரங்கள் இல்லை என்பது; அவை அயனி பலா உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள்,' என, தெரிய வந்ததை தொடர்ந்து, மரங்கள் வெட்ட, வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்தனர்.இந்நிலையில், கோழிக் கோடு சாலை நர்த்தகி அருகே, 'சாலையோரம் இருந்த பழமையான அயனி மரம், ஆபத்தான மரம்,' என கூறி வெட்டி உள்ளனர். இச்சாலை, பல ஆபத்தான மரங்கள் இருந்தும், பழமையான அயனி மரம் வெட்டப்பட்டது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூர் மக்கள் கூறுகையில், 'சாலையோரங்களில், அகற்ற வேண்டிய மிக ஆபத்தான மரங்கள் அகற்றப்படாத நிலையில், குறிப்பிட்ட பழமையான இந்த மரம் அகற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய குளறுபடிகளை தடுக்க, வருவாய்துறை, நெடுஞ்சாலை துறை, வனத்துறை, தீயணைப்பு துறையினர் ஒருங்கிணைந்து, ஆய்வு மேற்கொண்டு ஆபத்தான மரங்களை அடையாளப்படுத்தி அகற்ற வேண்டும். இதன்மூலம், விலை உயர்ந்த மரங்கள் வெட்டுவதை தடுக்க முடியும். இந்த வெட்டப்பட்டது குறித்து, மாவட்ட வன அலுவலர் விசாரணை நடத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை