உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விரிசல் ஏற்பட்ட பகுதி எம்.பி., அமைச்சர் ஆய்வு

விரிசல் ஏற்பட்ட பகுதி எம்.பி., அமைச்சர் ஆய்வு

கூடலுார்;மேல்கூடலுார் கோக்கால் பகுதியில், விரிசல் ஏற்பட்ட வீடுகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி., ராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர்.கூடலுார் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மேல்கூடலுார், கோக்கால் ஒன்றரை சென்ட் குடியிருப்பு பகுதியில், ஆறு வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. அதில் மக்கள் வசிக்க முடியாமல், உறவினர் வீடுகளில் தங்கி உள்ளனர்.இப்பகுதியை, 'புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, விரிசலுக்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு காண வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தினர்.இந்நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி., ராஜா ஆகியோர் நேற்று மாலை விரிசல் ஏற்பட்ட வீடுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.எம்.பி., ராஜா கூறுகையில்,''வீடுகள் விரிசல் அடைந்த பகுதியை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்கள், அப்பகுதியில் தொடர்ந்து வசிப்பதா அல்லது, வீடுகளுடன் மாற்றிடம் வழங்குவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.ஆய்வின் போது, நீலகிரி கலெக்டர் லட்சுமிபவ்யா, கூடுதல் கலெக்டர் கவுசிக், ஆர்.டி.ஓ., செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை