உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் விதிமீறிய கட்டடம் இடிப்பு

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் விதிமீறிய கட்டடம் இடிப்பு

ஊட்டி, : ஊட்டியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலக கட்டடம், அவ்வப்போது பழமை மாறாமல் பொலிவுப்படுத்தப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன், கலெக்டர் அலுவலகம் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் விதிமீறி புதிய கட்டடம் கட்டப்பட்டது. பழமையான அலுவலக கட்டடத்தின் பொலிவு பாதிக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த புதிய கட்டடத்தை அகற்ற பல்வேறு அமைப்பினர் கலெக்டருக்கு புகார் அனுப்பினர். பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், கட்டடம் அகற்றப்படாமல் இருந்தது.ஏற்கனவே, 'ஊட்டி - 200' விழாவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், ஊட்டியில் பாரம்பரிய கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க நிதி ஒதுக்கியதுடன், கட்டடங்களில் பொலிவு பாதிக்கும் வகையில் எந்த கட்டுமானமும் இருக்கக் கூடாது என, அறிவுறுத்தினர். இது குறித்து, நம் நாளிதழில் ஜூன், 21ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக கலெக்டர் உத்தரவுப்படி அந்த கட்டடம் நேற்று, தடாலடியாக இடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை, பொதுநல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை