உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கள்ளச்சாராய மரணம் தே.மு.தி.க., கண்டனம்

கள்ளச்சாராய மரணம் தே.மு.தி.க., கண்டனம்

ஊட்டி:ஊட்டியில் தே.மு.தி.க., சார்பில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், 'கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பல உயிர்கள் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். இச்சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கள்ளச்சாராயம் அருந்தி, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, அதிநவீன சிகிச்சை அளித்து, அவர்களது உயிரை காப்பாற்ற வேண்டும். உயிரிழந்தவர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரின் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. இதில், பெண்கள் உட்பட, திரளான கட்சியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை