மேலும் செய்திகள்
கடும் மேகமூட்டம்; வாகனங்கள் இயக்க சிரமம்
12 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
12 hour(s) ago
268 துாய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு
12 hour(s) ago
பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரோட்டரி கிளப் ஏற்பாடு
12 hour(s) ago
ஊட்டி: ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன், விலைவாசி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து, தே.மு.தி.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். பொருளாளர் மவுலா, ஊட்டி நகர செயலாளர் அபு, மாநில செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ் மற்றும் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில வர்த்தக அணி துணை செயலாளர் முருகேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.ஆர்ப்பாட்டத்தில், 'மின் கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வு, ரேஷன் கடைகளில், பருப்பு பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடு ஆகியவை குறித்தும், காவிரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் மத்திய, மாநில அரசுகள் காவிரியில் இருந்து தண்ணீரை உடனடியாக பெற்றுத் தர வேண்டும்,' என, கோஷம் எழுப்பப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து கட்சியினர் பலர் பங்கேற்றனர். கோத்தகிரி பேரூராட்சி முன்னாள் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago