உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை இல்லாத நீலகிரி விழிப்புணர்வு ஓட்டம்

போதை இல்லாத நீலகிரி விழிப்புணர்வு ஓட்டம்

ஊட்டி : ஊட்டி கிரசன்ட் கேசில் பப்ளிக் பள்ளியில், 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,'போதை இல்லாத நீலகிரி' என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஓட்டம், காலை, 7:30 மணிக்கு துவங்கியது.இதனை ஏ.டி.எஸ்.பி., சவுந்தரராஜன் மற்றும் பள்ளி தாளாளர் உமர் பரூக் ஆகியோர் துவங்கி வைத்தனர். ஊட்டி தலைகுந்தா வரையில், 10 கி.மீ., துாரம் வரை நடந்த விழிப்புணர்வு ஓட்டத்தில், 100 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.வழியெங்கும், போதை ஒழிப்பு குறித்து தேசிய கொடியை பிடித்தவாறு பள்ளி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் ஜாய்ஸ் டிக்ரூஸ் தேசிய கொடியை ஏற்றிய போது, மாணவர்கள் மரியாதை செலுத்தினார். பின், மாறுவேட போட்டி, பேச்சுப்போட்டி உட்பட பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ