மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பந்தலுார்;பந்தலுார் பகுதியில் சுற்றிச்திரியும் குரங்குகளால் குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பந்தலுார் பஜார் பகுதியில் சமீப காலமாக குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. கூட்டமாக வரும் குரங்குகள் கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. வீட்டு கூரைகளின் மீது குரங்குகள் ஓடுவதால் கூரைகள் உடைந்து, தற்போது மழை பெய்து வரும் நிலையில் மழை நீர் முழுவதும் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும், 'வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்து செல்வது; தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடிக்க முற்படுவது; விவசாய தோட்டங்களில் புகுந்து பாக்கு மற்றும் காய்களை சேதப்படுத்தி வருவது,' என குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. நகராட்சி அலுவலக வளாகத்தில் முகாமிடும் குரங்குகள், அலுவலகத்திற்குள் புகுந்து கோப்புகளை எடுத்துச் செல்வதும் தொடர்கிறது.'தொல்லை தரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்துச் செல்ல வேண்டும்,' என, மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
03-Oct-2025