உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எல்லை சோதனை சாவடிகளில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

எல்லை சோதனை சாவடிகளில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

பந்தலுார்;பந்தலுார் அருகே, பாட்டவயல் மற்றும் சோலாடி சோதனை சாவடிகளில், தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித் சிங் பிரார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சோதனை சாவடிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பணிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை ஆய்வு செய்து, ஆவணங்கள் இல்லாத பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும், எல்லை சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பணிகள் குறித்தும் விளக்கம் கேட்டார். தொடர்ந்து வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், முழுமையான பரிசோதனை செய்யப்பட்டு, ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரும் பணம் மற்றும் பொருட்களை, எந்தவிதமான பாரபட்சமின்றி பறிமுதல் செய்யவும், ஆய்வு பணிகளை முறையாக மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.ஆய்வின் போது, தேர்தல் உதவியாளர் தினேஷ்குமார், பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஓ. அசோக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை