உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பீல்டு மார்ஷல் மானெக் ஷாவின் 16ம் ஆண்டு நினைவு தினம்; கல்லறை தோட்டத்தில் அனுசரிப்பு

பீல்டு மார்ஷல் மானெக் ஷாவின் 16ம் ஆண்டு நினைவு தினம்; கல்லறை தோட்டத்தில் அனுசரிப்பு

ஊட்டி : ஊட்டியில் பீல்டு மார்ஷல் மானெக் ஷாவின், 16 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடந்த, 1971ம் ஆண்டு நடந்த இந்தியா -பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றிபெற சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக, பீல்டு மார்ஷல் என்ற ஐந்து நட்சத்திர அந்தஸ்தை பெற்ற முதல் இந்திய ராணுவ அதிகாரி ஜெனரல் மானெக் ஷா ஆவார். 40 ஆண்டுகால ராணுவ வாழ்க்கையில், இரண்டாம் உலகப்போரிலும், சுதந்திரத்துக்கு முந்தைய போர்கள் மற்றும் 1947, 1965, 1971 இந்தோ.,-- பாக்., போர்கள், குறிப்பாக 1962ம் ஆண்டு இந்தியா - -சீனா போரில் பங்கேற்றார். இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் மற்றும் பத்மபூஷன் ஆகிய விருதுகளை பெற்றார். 1973ம் ஆண்டு ஜன., 15ம் தேதி ஓய்வு பெற்று, குன்னுாரில் குடியேறினார். வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில், 2008ம் ஆண்டு ஜூன், 27ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், அவரது, 16ம் ஆண்டு நினைவு தினம், ஊட்டியில் பார்சி கல்லறை தோட்டத்தில் உள்ள அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, எம்.ஆர்.சி., ராணுவ மையம் மற்றும் ஸ்டேஷன் தலைமையகம் சார்பில் நேற்று நடந்தது. அதில், முப்படை சகோதரத்துவம் சார்பில், வெலிங்டன் ராணுவ கல்லுாரி கமாண்டென்ட் லெப்டினன்ட் ஜெனரல் சுனில் குமார் யாதவ், மானெக் ஷாவின் கல்லறையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ