மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம்
21 hour(s) ago
கூடலுார்:முதுமலை மாயாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில், தெப்பக்காடு தரைப்பாலம் மூழ்கியதால், மசினகுடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கூடலுார், முதுமலை, நடுவட்டம் பகுதிகளில் நேற்று முன்தினம், முதல் பலத்த மழை பெய்தது. ஊட்டி- கூடலுார் தேசிய நெடுஞ்சாலை, ஆகாஷபாலம் அருகே இரவு, 9:00 மணிக்கு மண் சரிவு ஏற்பட்டு, தமிழகம்- கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை துறையினர், பொக்லைன் மூலம், மண்ணை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.தமிழக -கேரளா எல்லையான கீழ்நாடுகாணி பகுதியில், இரவு மரம் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோன்று ஓவேலி காந்திநகர் பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அகற்றி போக்குவரத்து சீரமைத்தனர்.முதுமலை, மாயாறு ஆற்றில், நேற்று காலை ஏற்பட்ட வெள்ளத்தில், தெப்பக்காடு தரைப்பாலம் மூழ்கியது. இதனால், தெப்பக்காடு-மசினகுடி இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால், மசினகுடி மக்கள், சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். கூடலுாரில் இருந்து மசினகுடிக்கு இயக்கப்படும் பஸ்கள் தெப்பக்காடு வரை இயக்கப்பட்டது.தொரப்பள்ளி இருவயல் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியே வர முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.புத்துார்வயல், தேன்வயல், இருவயல், குணில், குச்சிமுச்சி பகுதிகளில விவசாய தோட்டங்கள் மழை வெள்ளம் சூழ்ந்து விவசாய பயிர்கள் பதிக்கப்பட்டது. தேன்வயல் சாலையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் புத்துார்வயல் - குணில் இடையே போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். பாடந்துறை புழுக்கொல்லி பகுதியில் முஸ்தபா என்பவரின் கிணறு நிலத்துக்குள் புதைத்தது. அதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்ய வலியுறுத்தி உள்ளனர்.
21 hour(s) ago