மேலும் செய்திகள்
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் மோதி விபத்து
4 hour(s) ago
பந்தலுார்;பந்தலுார் அருகே கிளன்ராக் வனப்பகுதி செல்லும் சாலையை ஒட்டிய தோட்டத்தில் கடமான் ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. அப்பகுதிக்கு சென்ற தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். தேவாலா வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் கேமரா பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட்டனர். இப்பகுதிக்கு வேறு எந்த வனவிலங்குகளும் வந்து செல்லாத நிலையில், உயிரிழந்த கடமான் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதே பகுதியில் புதைக்கப்பட்டது.வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'உயிரிழந்த கடமானின் கழுத்து பகுதியில் மட்டுமே காயம் இருந்த நிலையில், யாரேனும் வேட்டையாடுவதற்காக கடமானின் கழுத்தில் வெட்டி இருக்கலாம். வனத்துறையினர் விசாரணை நடத்த வேண்டும்,' என்றனர்.
4 hour(s) ago