உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானை கண்காணிப்பு பணியில் வன குழுவினர்

யானை கண்காணிப்பு பணியில் வன குழுவினர்

பந்தலுார்;பந்தலுார் அருகே, நெலாகோட்டை பகுதி, வயநாடு செல்லும் சாலை, முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், இந்த பகுதியில் அடிக்கடி யானைகள் வந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் காலை, 9:00 மணிக்கு சாலையில் வந்த காரை யானை தாக்கி சேதப்படுத்தியது. 'வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தினர்.தொடர்ந்து, 24 மணி நேரமும் அதிவிரைவு மீட்பு குழுவினர் மற்றும் யானை கண்காணிப்பு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காலை, 6:00 மணி முதல் 10:00 மணி வரை, வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்புடன் வந்து செல்ல ஏதுவாக, பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதுடன், மாலை, 4:00- மணிக்கு மேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை