உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானை துரத்தியதில் தப்பி ஓடிய நான்கு தொழிலாளர்கள் காயம்

யானை துரத்தியதில் தப்பி ஓடிய நான்கு தொழிலாளர்கள் காயம்

பந்தலுார்:பந்தலுார் அருகே யானை துரத்தியதில், 4 தொழிலாளிகள் காயம் அடைந்தனர்.பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடி பகுதியை ஒட்டி, சேரங்கோடு டான்டீ தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. வனப்பகுதியாக மாறிய இந்த பகுதியில் யானைகள் மற்றும் சிறுத்தை முகாமிட்டு உள்ளன. இந்நிலையில் நேற்று காலை இங்குள்ள எஸ்டேட் பகுதிக்கு தேயிலை பறிப்பதற்காக பெண் தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.அப்போது, தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த யானை ஒன்று, தொழிலாளர்களை துரத்தி உள்ளது. யானையிடமிருந்து தப்பிய தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் புகுந்து ஓடி உள்ளனர். சக தொழிலாளர்கள் சப்தம் எழுப்பி யானையை வேறு பக்கம் துரத்தியுள்ளனர். அதில், பெண் தொழிலாளர்கள் மோலி,55, வள்ளியம்மாள்,57, வித்யா,47, சீதாதேவி,40, ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, லேசான காயங்களுடன் இருந்த வித்யா மற்றும் சீதாதேவி ஆகியோர் சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர். தொழிலாளர்களை யானை துரத்திய சம்பவம், சக தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி