உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வேளாண் தொழில் முனைவோர் திட்டத்தில் நிதியுதவி

வேளாண் தொழில் முனைவோர் திட்டத்தில் நிதியுதவி

மேட்டுப்பாளையம்;கோவை வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடாசலம் கூறியிருப்பதாவது:-கோவை மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கீழ், பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம் 2024---25ம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ளது. அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 3 பட்டதாரி இளைஞர்களுக்கு நிதி உதவி பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் பயன்களை பெறுவதற்கு வயது வரம்பு 21 முதல் 40 வரையில் இருக்க வேண்டும். கல்வித்தகுதி, இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு வேளாண் இணை இயக்குநர் அலுவலகம், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ