மேலும் செய்திகள்
அபாயத்தில் வாட்டர் ஏ.டி.எம்.,:பொதுமக்கள் அச்சம்
07-Nov-2025
டி.என்.43 அஷ்ரப் குழு சங்கமம் நிகழ்ச்சி
07-Nov-2025
பூங்காவில் காய்ந்த மலர்கள்
07-Nov-2025
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
07-Nov-2025
கோத்தகிரி:கோத்தகிரி கடசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, சிக்கிள் செல் அனிமியா நோய் சிறப்பு முகாம் நடந்தது.மாநில அரசின் பள்ளி சிறார் நலத்திட்டம் சார்பில் நடந்த முகாமை, பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் துவக்கி வைத்தார்.அரசு மருத்துவர் பானுப்பிரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் மாணவர்களை பரிசோதனை செய்தனர்.இதில், சிக்கிள்செல் அனிமியா மற்றும் ரத்தசோகை உள்ளதா என, பரிசோதிக்கப்பட்டது.மேலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் இருந்து, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.தொடர்ந்து பள்ளியில் பொது சுகாதாரம் பேணி காப்பதுடன், மாணவர்களுக்கு இயற்கை உணவு மற்றும் சிறுதானிய உணவுகளை உண்ணுவதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025