மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
கூடலுார்:கூடலுார் பஸ் ஸ்டாண்ட் சாலை ஓரங்களில், திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கூடலுார் நகரில், திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை நகராட்சி தடை செய்துள்ளது. கடைகளில் மட்கும் குப்பை, மட்காத குப்பை பிரித்து, வாகனங்களில் வரும் நகராட்சி ஊழியர்களிடம் கொடுக்க அறிவுறுத்தி உள்ளனர்.பல கடைக்காரர்கள் இதனை பின்பற்றி வருகின்றனர். ஆனால், பலர் குப்பையை திறந்த வெளியில் கொட்டி செல்கின்றனர். இதனை தடுக்க நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக, நகராட்சி ஊழியர்கள் அவைகளை தினமும் அகற்றி வருகின்றனர்.இந்நிலையில், புதிய பஸ் ஸ்டாண்ட் ஒட்டிய சாலை ஓரங்களில், திறந்தவெளியில் குப்பைகளை கொட்டுவதும், வீசி செல்வதும் அதிகரித்துள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில்,'சாலையோரம் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டி செல்வதால், சுகாதார பாதிப்பு ஏற்படுவதுடன் நடந்து செல்லுவும் சிரமம் ஏற்படுகிறது. இதனை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதன் மூலம் நகரின் சுகாதாரம் பாதுகாக்கப்படும்,' என்றனர்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025