மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
19 hour(s) ago
கூடலுார் : கூடலுார் தேவர்சோலை அரசு மேல்நிலை பள்ளி யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.கூடலுார் தேவர்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில், 1962 முதல் 2018ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவர் வேலாயுதன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை, செய்து முகமது துவக்கி வைத்து, பேசினார். முன்னாள் ஆசிரியர் ஆணி, மாணவர்களால் கவுரவிக்கப்பட்டார்.தொடர்ந்து, அனைவரும் தங்கள் பள்ளிப்பருவ நினைவுகளையும், தற்போது குடும்ப விபரங்களையும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு களத்தில் உதவிய, கூடலுாரை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள், தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தகுமாரி, தேவர்சோலை பேரூராட்சி தலைவர் வள்ளி, துணைத் தலைவர் யுனுஸ்பாபு, கவுன்சிலர்கள் மூர்த்தி, நாசர், மாதேவ், அனிபா மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாணவர் மானு நன்றி கூறினார்.
19 hour(s) ago