இருதய ஆண்டவர் தேவாலய திருவிழா கொண்டாட்டம்
ஊட்டி;ஊட்டி இருதய ஆண்டவர் தேவாலய திருவிழா, சிறப்பாக கொணடாடப்பட்டது.ஊட்டி வண்டிசோலை பகுதியில் பழமை வாய்ந்த இருதய ஆண்டவர் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்திற்கு உட்பட்டு, 850 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இங்கு, ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பங்கு திருவிழா நடக்கிறது.நடப்பாண்டுக்கான, 128 வது ஆண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த, 26ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சிறப்பு நவநாள் திருப்பலி நடந்தது. முக்கிய திருவிழா நாளில், ஊட்டி மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில், ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. இந்த திருப்பலியில், பங்கு தந்தை ரவி லாரன்ஸ், உதவி பங்கு தந்தை ஜுட் உட்பட, ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர். இறுதியில், அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை ஆடம்பர தேர் பவனி நடந்தது. விழாவை ஒட்டி, தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.