மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
3 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
3 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
3 hour(s) ago
பந்தலுார், - பந்தலுார் அருகே மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர்.பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.செட்டி வயல் பகுதியில் சாலையோர தடுப்பு சுவர் இடிந்தது. ஏலியாஸ் கடை-கொளப்பள்ளி சாலையில் மரம் விழுந்தது. கூடலுாரில் இருந்து கேரள மாநிலம் வயநாடு செல்லும் சாலையில், நெலாக்கோட்டை அருகே கூவச்சோலை என்ற இடத்தில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பொக்லைன் உதவியுடன் மண்ணை அகற்றி சாலையை சீரமைத்தனர். வருவாய் துறையினர் கூறுகையில், 'மழை பெய்து வரும் நிலையில் நீரோடைகள் மற்றும் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் ஆற்றை கடக்கும் போது கவனத்துடன் செல்ல வேண்டும். புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்காக ஆறுகள் மற்றும் நீரோடைகள் அருகே செல்ல வேண்டாம்,' என்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago