உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் வரும் 18ல் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு தீர்ப்பாய கூட்டம்

குன்னுாரில் வரும் 18ல் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு தீர்ப்பாய கூட்டம்

குன்னுார், - குன்னுாரில் சட்ட விரோத தடுப்பு தீர்ப்பாய கூட்டம் வரும், 18ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: டில்லி ஐகோர்ட் நீதிபதி புருசைந்திர குமார் கவுரவ் தலைமையில், குன்னுார் மவுண்ட் ரோட்டில் உள்ள நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், வரும், 18 மற்றும் 19ம் தேதிகளில், காலை, 10:00 மணி முதல், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாய அமர்வு நடக்கிறது.இந்த அமர்வில், சாட்சியமளிக்க ஆர்வமுள்ள அனைவரும் தங்களது பிரமாண பத்திரங்களை (இரண்டு நகல்கள்) தாக்கல் செய்யலாம். மேலும், தீர்ப்பாயத்தில் குறுக்கு விசாரணைக்காக குறிப்பிட்ட தேதிகளில் நேரில் ஆஜராக வேண்டும். dhc.gmail.com. என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ