உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு துவக்கம்

அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு துவக்கம்

மேட்டுப்பாளையம் : காந்திநகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டது. ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகரில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில்,75க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.இவர்களுக்கு, கம்ப்யூட்டர் வாயிலாக பாடங்களை சொல்லிக் கொடுக்க, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் முன் வந்தனர். அதற்காக ஆசிரியர்களும், பெற்றோர்களும் இணைந்து, 3 லேப்டாப்புகளை வாங்கி பள்ளிக்கு வழங்கினர்.இந்த லேப்டாப்பில், மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான பயிற்சி வகுப்பு துவக்க நிகழ்ச்சி, பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை புனித செல்வி தலைமை வகித்தார். ஆசிரியை உமா வரவேற்றார்.நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலர் ராமசாமி, கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி பணியாளர் ஜெயராமன், ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ், பள்ளி ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர். ஆசிரியை அமல சிந்திய நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ