உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஜோதி விதை கிழங்கு விற்பனை அதிகரிப்பு

ஜோதி விதை கிழங்கு விற்பனை அதிகரிப்பு

ஊட்டி;ஊட்டியில் விதைப்பு பணிக்கு இமாலினி, ஜோதி விதை கிழங்கு விற்பனை அதிகரித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், முள்ளங்கி உட்பட பல்வேறு மலை காய்கறிகள் பயிரிடப்படுகிறது. ஒரு போகத்திற்கு, சராசரியாக, 10 ஆயிரம் ஏக்கரில் உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு சுவை அதிகம் என்பதால், நல்ல விலை கிடைத்து வருகிறது. பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அதிகளவு உருளைக்கிழங்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக, 1.40 டன் உருளை கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

விதை கிழங்கு விற்பனை அதிகரிப்பு

இந்நிலையில், 'இமாலினி, ஜோதி, குப்ரி ஸ்வர்ண, குப்ரி நீலமா , குப்ரி ஷ்யாதிரி ,குப்ரி நீலாம்பரி' உள்ளிட்ட கிழங்கு விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதில், ஊட்டியை பொறுத்த வரை, இமாலினி மற்றும் ஜோதி ஆகிய கிழங்கு விதைகள் தான், அதிகளவில் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். 50 கிலோ எடை கொண்ட ஒரு விதை துண்டு, 1,550 முதல் 1700 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் என்.சி.எம்.எஸ்., நிறுவனம் உட்பட தனியார் விதை கிழங்கு மண்டி என, 52 இடங்களில் விதை கிழங்கு விற்பனை நடந்து வருகிறது.விவசாயி நஞ்சன் கூறுகையில், '' நீலகிரியை பொறுத்த வரை இமாலினி, ஜோதி ஆகிய விதை கிழங்குகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு ஏக்கர் உருளை கிழங்கு சாகுபடிக்கு, 25 துண்டு விதை தேவைப்படுகிறது. உருளை கிழங்கிற்கு தற்போது, 100 ரூபாய் வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அறுவடைக்கு தயாரான உருளை கிழங்குகளை சந்தைக்கு அனுப்பி வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கார் போக விவசாயத்திற்கு இமாலினி, ஜோதி விதை கிழங்கு பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி