உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுார் பஜாரில் அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை

பந்தலுார் பஜாரில் அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை

பந்தலுார்;பந்தலுார் பஜாரில் அதிகரித்து வரும் தெரு நாய் தொல்லையால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.பந்தலுார் பஜார் வழியாக தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சாலை அமைந்துள்ளது. மிகவும் குறுகலான சாலையில் இரண்டு பக்கங்களிலும், பெரும்பாலான வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர்.இதனால், வாகனங்கள் செல்வதிலும், பஜார் பகுதிக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை வசதி இல்லாத நிலையில், சாலையில் நடந்து செல்லும் நிலை தொடர்கிறது.இதற்கிடையில் பஜார் பகுதி சாலையில், அதிகளவில் தெரு நாய்கள் முகாமிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்தப்பகுதியில் திறந்த வெளிகளில் மீன் மற்றும் கோழி கழிவுகளை கொட்டி வருவதால் அவற்றை உட்கொள்ளும் தெருநாய்கள் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு, பாதசாரிகளை துரத்தி கடிப்பதும் தொடர்கிறது. 'தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும், அது குறித்து நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. எனவே, நகராட்சி நிர்வாக அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ