| ADDED : ஜூலை 10, 2024 02:13 AM
பந்தலூர்;பந்தலூர் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாதிகள் நல சங்கம் சார்பில் தலைவர் அஷ்ரப், செயலாளர் ஆண்டனி, பொருளாளர் காளிமுத்து ஆகியோர் இணைந்து முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது, பந்தலூர் பஜாரில் கால்நடைகள் சாலையில் உலா வருவதால், வாகன விபத்துக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மீது கால்நடைகள் தாக்குதல் போன்றவை தொடர்கிறது. இரவு நேரங்களில் கடைகளின் முன்பாக முகாமிடுவதால், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. பஜாரில் அமைந்துள்ள வாட்டர் ஏ.டி.எம். கடைகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டு, பயன்பாடு இன்றி உள்ளதால் கடைகள் மறைக்கப்பட்டு வியாபாரிகள் பாதிக்கப்படுவதுடன், வாகன ஓட்டுனர்களும் பாதிக்கப்படுகின்றனர். பந்தலூர் பஜார் பகுதியை தூய்மை நகராக மாற்றம் செய்ய பலமுறை வலியுறுத்தியும் கண்டுகொள்ளாத குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மக்களுடன் முதல்வர் மற்றும் ஜமாபந்தி உள்ளிட்ட பல்வேறு முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், கடையடைப்பு மற்றும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்கள்.