மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
11 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
11 hour(s) ago
பாலக்காடு:பாலக்காடு அருகே, 'கண்ணியார்களி' நடன நிகழ்ச்சி, நாளை துவங்கி, இரு நாட்கள் நடக்கிறது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் தனித்துவமான கோவில் கலையாக, 'கண்ணியார்களி' நடனம் உள்ளது. ஆண்கள் மட்டும் குழுக்களாக சேர்ந்து ஆடும் இந்த நடனம் 700 ஆண்டு பழமை வாய்ந்தது.இந்த நடனத்தை ஊக்குவிப்பதற்காக, கேரள கண்ணியார்களி கலை வளர்ச்சி கவுன்சில் கடந்த, 28 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலில் சார்பில், நாளை, 16ம் தேதியும், நாளை மறுநாள், 17 தேதியும், 'பைத்திருகம் 2024' என்ற பெயரில், 'கண்ணியார்களி' நடன நிகழ்ச்சி நடக்கிறது.நாளை, 16ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு நெம்மார பழைய கிராம ஆரம்ப பள்ளிக்கூட வளாகத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை, கேரள நாட்டுப்புற அகாடமி தலைவர் உன்னிகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்.ஆலத்தூர் டி.எஸ்.பி., விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தொடர்ந்து, 34 குழுக்கள் கலந்துகொள்ளும் 'கண்ணியார்களி' நடன நிகழ்ச்சி நடக்கிறது. இத்தகவலை, பொது அழைப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
11 hour(s) ago
11 hour(s) ago