மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
4 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
4 hour(s) ago
பந்தலுார்;பந்தலுார் பகுதியல் சுற்றி வரும் கட்டை கொம்பன் யானையை வனத்துறை யின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், கட்டை கொம்பன் என்றழைக்கப்படும் ஆண் யானை கிராம குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் இடங்களில் புகுந்து அச்சுறுத்தி வருகிறது.மேலும், குடியிருப்புகளை ஒட்டி சப்தம் எழுப்பாமல் நிற்கும் யானை குறித்து தெரியாமல், வெளியில் வரும் மக்கள் ஓடி தப்பிக்கும் நிலை தொடர்கிறது. மேலும், சத்துணவு மையங்கள் மற்றும் ரேஷன் கடைகளை உடைத்து அரிசி மூட்டைகளை எடுத்து செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளது.கடந்த பத்து நாட்களாக இந்த யானை பகல் நேரங்களில் சாலை மற்றும் வீடுகளின் முன்பாக முகாமிடுவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இதனால், கட்டை கொம்பன் யானையை கண்காணிக்கவும், வனத்திற்குள் விரட்டும் பணியில், 'சேரம்பாடி மற்றும் பிதர்காடு வனச்சரகங்களுக்கு உட்பட்ட வன பணியாளர்கள், அதிவிரைவு மீட்பு குழுவினர், யானை கண்காணிப்பு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்,' என, 20 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு, 24 மணி கண்காணிப்பு வளையத்தில் கட்டை கொம்பனை வைத்துள்ளனர். இதனை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 hour(s) ago
4 hour(s) ago