மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
10 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
11 hour(s) ago
கூடலுார் : கூடலுார் அருகே கீழ்நாடுகாணி சாலையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டதால் மூன்று மாநிலங்கள் இடையே மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம் கூடலுார் அருகே, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வழிகடவு பகுதி அமைந்துள்ளது, இங்கு நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த மழை பெய்தது.மழை தொடர்ந்த நிலையில், இரவு, 7:15 மணிக்கு தமிழகம்- கேரளா எல்லையான கீழ்நாடுகாணி முதல், வழிகடவு வரையிலான சாலையில், பல இடங்களில் மரங்கள் விருந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால், தமிழக-கேரளா -கர்நாடக இடையே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரளாவிலிருந்து, தமிழ்நாடு மற்றும் கர்நாடக செல்லும் வாகனங்கள் வழிகடவு பகுதியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டன. தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள், கூடலுார் நாடுகாணியிலிருந்து வயநாடு வழியாக கேரளாவுக்கு அனுப்பப்பட்டன. வாகன ஓட்டுனர்கள் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.கேரள போலீசார் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு குழுவினர் மூன்று மணி நேரம் போராடி, மரங்கள் மற்றும் மண்ணை அகற்றி இரவு, 10:30 மணிக்கு போக்குவரத்தை சீமைத்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'இப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலையில், 6 இடங்களில் மரங்கள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. மூன்று மணி நேரம் போராடி மரம் மற்றும் மண் அகற்றப்பட்டு வாகன போக்குவரத்து துவங்கப்பட்டது,' என்றனர்.
10 hour(s) ago
11 hour(s) ago