உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு மாதிரி பள்ளி சாலையில் சிறுத்தை

அரசு மாதிரி பள்ளி சாலையில் சிறுத்தை

குன்னுார்;குன்னுார் வசம்பள்ளம் அரசு மாதிரி பள்ளி அருகே சிறுத்தை வந்து சென்றதால் பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், குன்னுார் வள்ளுவர் நகர் வசம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால் மக்கள் பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.இங்கு அரசு மாதிரி பள்ளி அருகே சாலையில் வந்து நீண்ட நேரம் சிறுத்தை அமர்ந்து சென்ற காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 'இதனால், மாலை நேரங்களில் வெளியே தனியாக யாரும் செல்ல வேண்டாம்,' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்