உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உள்ளாட்சி துறை ஊழியர் சங்க ஆண்டு பேரவை கூ ட்டம்

உள்ளாட்சி துறை ஊழியர் சங்க ஆண்டு பேரவை கூ ட்டம்

ஊட்டி: நீலகிரி மாவட்ட சி.ஐ.டி.யு., நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்க ஆண்டு பேரவை நடந்தது.சங்க தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வினோத், மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் ஆகியோர் பேசினர். உள்ளாட்சி துறை மாநில சம்மேளன மாநில செயலாளர் பாலசுப்ரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.கூட்டத்தில், 'ஊட்டி, குன்னுார், கூடலுார் மற்றும் நெல்லியாளம் நகராட்சிகளில், 400க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 10 ஆண்டுக்கு மேலாக வேலை செய்து வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; 11 பேரூராட்சிகளில் பணி செய்து வரும் சுய உதவிக்குழு துாய்மை பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் வழங்க வேண்டும்; ஊட்டி நகராட்சியில் வேலை செய்யும், 140 ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு கோர்ட் உத்தரவுப்படி ஊதியம் வழங்குவதுடன் இ.பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டும். 35 கிராம ஊராட்சிகளில் நுாற்றுக்கணக்கான பம்ப் ஆப்பரேட்டர்கள், துாய்மை பணியாளர் மற்றும் துாய்மை காவலர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும்,' உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை