உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிலம்பாட்ட போட்டி: நீலகிரி மாணவர்கள் அசத்தல்

சிலம்பாட்ட போட்டி: நீலகிரி மாணவர்கள் அசத்தல்

பந்தலுார்:தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில், கோவையில், நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் நீலகிரி மாணவர்கள் அசத்தி உள்ளனர்.பந்தலுார் அருகே பொன்னுார் கிராமத்தை சேராந்தவர்கள் யோகேஸ் மற்றும் சுப்புலட்சுமி. இவர்கள் இருவரும் சிலம்ப பயிற்சியாளர்கள். இருவரும் சேர்ந்து பொன்னுார், நாடுகாணி கிராமப்புறங்களை சேர்ந்த, 30 மாணவர்களுக்கு கடந்த, 3- ஆண்டுகளாக சிலம்ப பயிற்சி அளித்து வருகின்றனர். இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல், மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை, சிலம்ப பயிற்சி எடுத்து வருகின்றனர். அதில், 4 மாணவிகள் உள்ளிட்ட, 19 பேர் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் கோவையில், நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்றனர். அங்கு தங்கள் திறமையால், 8 தங்கம், 3- வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை பெற்றனர். குக்கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், தேசிய அளவிலான போட்டியில் பதக்கங்களை குவித்தது அனைவரின் பாராட்டையும் பெற்றனர். அதில், வெள்ளி பதக்கம் பெற்ற, 2 ம் வகுப்பு படிக்கும் மாணவி, சுபிட்சாஸ்ரீ சிறப்பு பாராட்டை பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை தலைமை ஆசிரியர் முனைவர் சமுத்திர பாண்டியன், கூடலுார் அரசு கல்லுாரி பேராசிரியர் மகேஷ்வரன், பொன்னுார் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் ரகு ஆகியோர் தலைமையிலான குழுவினர் பாராட்டி கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை