மேலும் செய்திகள்
ரூ. 1.30 கோடிமதிப்பீட்டில் சாலை பணி
23 hour(s) ago
நீலகிரியில் 3,402 பேருக்கு மகளிர் உரிமை தொகை
23 hour(s) ago
மணியட்டி சாலையில் சிறுத்தை நடமாட்டம்
23 hour(s) ago
காவல்துறை வாகனங்கள் டி.ஐ.ஜி., ஆய்வு
23 hour(s) ago
கூடலுார் : கூடலூரில் தொடரும் மழையில், மண் சரிவு ஏற்பட்டு கடை மற்றும் வீடுகள் சேதமடைந்தது.கூடலூர் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம், இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது.கோழிக்கோடு சாலை ஆமைக்குளம் பகுதியில் இரவு 10:00 மணிக்கு மண்சரிவு ஏற்பட்டு, குமார், என்பவரின் மளிகை கடை மீது விழுந்ததில், கடையும் அதில் இருந்த மளிகை பொருட்களும் சேதமடைந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.கோழிக்கோடு சாலை இரும்புபாலம் அருகே, பாண்டியார் - புன்னம்புழா ஆற்றின் கரையோரத்தில், இருந்த ராட்சத மரம் நேற்று காலை சாய்ந்தது. அப்போது, அவ்வழியாக நடந்த சென்ற, பெண் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினார்.பொன்னூர் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐந்து வீடுகள் சேதமடைந்தது. வீடுகளை வி.ஏ.ஓ., சாம்சுந்தரி, உதவியாளர் சதீஷ் ஆய்வு செய்தனர். கூடலூர் புறமணவயல், செம்பாலா பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில், ஒரு வீடு சேதமடைந்தது. அதனை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago