உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி பசுந்தேயிலைக்கு ரூ.15.76 விலை நிர்ணயம்

நீலகிரி பசுந்தேயிலைக்கு ரூ.15.76 விலை நிர்ணயம்

குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை, கிலோவுக்கு, 15.76 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.குன்னுார் தேயிலை ஏல மையம் மற்றும் 'இன்கோ சர்வ்' மையத்தில் வாரந்தோறும் தேயிலை துாள் ஏலம் விடப்படுகிறது. துாளுக்கு கிடைக்கும் விலையின் அடிப்படையில், மாதந்தோறும் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.இதன்படி, நீலகிரி சிறு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலை துாள், ஏப்., மாத ஏலத்தின் அடிப்படையில், குன்னுாரில் உள்ள இந்திய தேயிலை வாரியம், பசுந்தேயிலைக்கான விலையை நிர்ணயம் செய்துள்ளது. இது தொடர்பாக, தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஏப்ரல் மாதத்திற்கான பசுந்தேயிலை, கிலோவுக்கு, 15.76 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,' என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ