மேலும் செய்திகள்
ரூ. 1.30 கோடிமதிப்பீட்டில் சாலை பணி
16 hour(s) ago
நீலகிரியில் 3,402 பேருக்கு மகளிர் உரிமை தொகை
16 hour(s) ago
மணியட்டி சாலையில் சிறுத்தை நடமாட்டம்
16 hour(s) ago
காவல்துறை வாகனங்கள் டி.ஐ.ஜி., ஆய்வு
16 hour(s) ago
குன்னுார்;இரவில் மட்டுமே பூத்து காலையில் வாடிவிடும் 'பிரம்ம கமலம்' என்று அழைக்கப்படும் நிஷா கந்தி பூ குன்னுாரில் பூத்துள்ளது.நீலகிரி மலை பகுதிகளில் ஏற்ற காலநிலையால் அரிய வகை மலர்கள் பூக்கின்றன. இவற்றில், தற்போது வீடுகளில் பிரம்ம கமலம் என்று அழைக்கப்படும், இரவில் பூத்து காலையில் வாடும் நிஷாகந்தி பூக்கள், குன்னுார் டென்ட் ஹில் பகுதியில் ரமேஷ் என்பவரின் வீட்டில் பூத்துள்ளன.தாவரவியல் ஆய்வாளர்கள் கூறுகையில்,' கள்ளி செடியை போன்று காணப்படும், இதன் தண்டுகளில் வளரும் இளஞ்சிவப்பு மொட்டு பூப்பதற்கு, 20 நாட்களாகும்.இதன் தாவரவியல் பெயர், 'எபிபைலம் ஆக்ஸிபெடலம்'. மிகவும் மென்மையான இந்த மலரில் வீசும் வாசனை அனை வரையும் ஈர்க்கிறது.மேலும், 'அனந்தசயனம், பெத்லகேம் லில்லி, குயின் ஆப் நைட்' என, பல்வேறு பெயர்களில் இந்த மலர் அழைக்கப்படுகிறது. சொர்க்கத்தின் பூக்கள்
இலங்கையில் சொர்க்கத்தின் பூக்களாக கருதி, 'கடப்புள் மால்' எனவும், ஜப்பானில் நிலவின் கீழ் பூத்திருக்கும் அழகாக பூக்கள் என கருதி 'ஜெக்கா பிஜின்' எனவும் அழைக்கப்படுகிறது. மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், 'பெத்லகேமின் நட்சத்திரம்' என, அழைக்கப்படுகிறது.ஆயுர்வேதத்தில், இதன் இலைகள் தீக்காயம், தோலில் ஏற்படும் காயங்களுக்கும்; பூக்கள் வயிற்றுவலிக்கு நிவாரணியாக உள்ளது. ஆன்மிகத்தில் சிவபெருமானுக்கு உகந்த மலராக கருதப்படுகிறது,' என்றார்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago