மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
10 hour(s) ago
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
10 hour(s) ago
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
10 hour(s) ago
குன்னுார்;சோகத்தொரை சமுதாய கூடத்தில், அரசின் ஒருங்கிணைந்த மையமாக தேர்வு செய்யப்பட்டதற்கான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அர்ஜுணன் தலைமை வகித்தார். வட்டார மேற்பார்வையாளர் காயத்ரி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் கணேசமூர்த்தி. பரமசிவம், புதிய பாரத எழுத்தறிவு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தனர்.புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பள்ளிக்கு விருது கிடைக்க காரணமான. சுகுணா, கல்வி மீட்பு பணிக்காக ஆசிரியர் புஷ்பா, தன்னார்வலர் பிரியா மற்றும் பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.ஊர் தலைவர் பசுபதி பேசுகையில், ''முழு எழுத்தறிவு பெற்ற கிராமமாக அறிவிக்க புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தப்படும்,'' என்றார். தையல் பயிற்சிக்கான சான்றிதழ், 17 மகளிருக்கு வழங்கப்பட்டது.இல்லம் தேடி கல்வி மையத்தில் பயின்று, 10ம் வகுப்பு தேர்வில் முதல், 3 இடங்களை பிடித்த பிரார்த்தனா, மித்துன், சுஜித் ஆகியோருக்கு ரங்கராஜன், ஸ்ரீதர் பரிசு வழங்கினர்.மாறுவேட போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் சாதித்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.பள்ளி கல்வி துறை சார்பில் ஆவண படம் தயாரிக்கப்பட்டது. ஊர் மக்கள் படுகரின பாரம்பரிய நடனமாடினர். ஏற்பாடுகளை தலைமையாசிரியை சுமதி தலைமையில் ஆசிரியர்கள், மக்கள் செய்திருந்தனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago