| ADDED : ஜூன் 08, 2024 12:33 AM
பந்தலுார்;பந்தலுார் அருகே மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், கனரா வங்கி நிர்வாகம், உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் மற்றும் மரங்கள் நடுநிகழ்ச்சியை நடத்தியது. பள்ளி தலைமை ஆசிரியர் பால்விக்டர் வரவேற்றார். கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் சண்முகவேல், 'இயற்கையை பாதுகாப்பது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம்,' குறித்து பேசினார். தொடர்ந்து மரம் வளர்ப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், பயிற்சியாளர் சுரேஷ்குமார், பயிற்றுனர் ராபிகா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜன் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சி பெண்கள் பங்கேற்றனர். பி.டி.ஏ. தலைவர் ரசீது நன்றி கூறினார்.பந்தலுார் நுாலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நுாலகர் அறிவழகன் வரவேற்றார். கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வனவர் பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் (பொ) மலர்க்கொடி, 'ஆல் தி சில்ட்ரன்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் உட்பட பலர் பங்கேற்றனர்.சேரங்கோடு ஊராட்சி சார்பில் எருமாடு அருகே ஆண்டஞ்சிரா குளத்தின் சுற்று பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் லில்லி, துணை தலைவர் சந்திர போஸ் தலைமையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், ஊராட்சி செயலாளர் சஜித், பணி மேற்பார்வையாளர் ஷர்மிளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.