உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம்

அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம்

மேட்டுப்பாளையம் : அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை, முதல் வகுப்பில் சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில், அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு தமிழக அரசு பள்ளி கல்வித்துறை, கடந்த மார்ச் மாதம் முதல் தேதியில் இருந்து, முதல் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை துவங்க வேண்டும் என, உத்தரவிட்டது. இதை அடுத்து அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், முதல் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை துவங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து காரமடை வட்டார கல்வி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், சிவசங்கரி ஆகியோர் கூறியதாவது: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் 123 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை, பள்ளியில் சேர்க்கும்படி பெற்றோர்களிடம் கூறி வருகின்றனர். மேலும், பள்ளி குழந்தைகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து, பெற்றோரிடம் ஆசிரியர்கள் விளக்கி வருகின்றனர். அதனால், கடந்த வாரம் வரை, அரசு பள்ளிகளில், முதல் வகுப்பில், 890 சிறுவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டு ஜூன் மாதம் இறுதி வரை, 1025 பேர் சேர்ந்து இருந்தனர். இன்னும் மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்கள் இருப்பதால், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதலாக, சிறுவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால்வாடியில் படிக்கும் குழந்தைகளை, அப்படியே அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்தாண்டை விட இந்த ஆண்டு, கூடுதலான மாணவர்கள் சேர்க்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை