| ADDED : ஆக 21, 2024 11:38 PM
கூடலுார் : முதுமலை வனத்தில் அதிகரித்து வரும் பார்த்தீனியம் செடிகளால், தாவர உண்ணிகள், உணவு தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.முதுமலை புலிகள் காப்பகத்தில், தொடரும் பருவமழையால் வனப்பகுதி, பசுமைக்கு மாறி வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது.எனினும், வனப்பகுதியில் உண்ணி செடிகள் போன்று, பயனற்ற பார்த்தீனியம் செடிகள் அதிகரித்து வருகிறது. அவைகள் வளரக்கூடிய பகுதியில், தாவர உண்ணிகள் விரும்பி உண்ணக்கூடிய தாவரங்கள் புற்கள் வளர்வதில்லை; அப்பகுதிகளில், வன விலங்களுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த செடிகளின் பூக்களால் மனிதர்களுக்கு மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் சுவாசம் தொடர்பான நோய்கள், ஒவ்வாமை போன்ற பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. சுற்று சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'வனத்தில் அதிகரிக்கும் பார்த்தீனியம் செடிகளால் எந்த பயனும் இல்லை. மேலும், அப்பகுதியில் தாவர உண்ணிகள் விரும்பி உண்ணும் தாவரங்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, பார்த்தீனியம் செடிகளை, முழுமையாக அழித்து, அப்பகுதியில் தாவர உண்ணிகள் விரும்பி உண்ணக்கூடிய தாவரங்களை வளர்க்க வேண்டும். இல்லையெனில், பார்த்தீனியம் செடிகளின் வளர்ச்சி அதிகரித்து, எதிர்காலத்தில் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும் ஆபத்து உள்ளது,' என்றனர்.