உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குங்குமம் வைத்து பன்னீர் தெளித்து பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு

குங்குமம் வைத்து பன்னீர் தெளித்து பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு

பந்தலுார்;கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவர்களை பன்னீர் தெளித்து, சந்தனம், - குங்குமம் வைத்து பள்ளி நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறந்த நிலையில், மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர். பந்தலுார் அருகே அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா மெட்ரிக் பள்ளி சார்பில், முதல் நாள் வகுப்புக்கு வந்த அனைத்து மாணவர்களுக்கும் பன்னீர் தெளித்து, சந்தனம், குங்குமம் வைத்து, சரஸ்வதி ஸ்லோகம் கூறி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, நடந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அன்பரசி தனராஜ் வரவேற்றார். பள்ளி தாளாளர் சுரேந்திரன் தலைமை வகித்தார். பள்ளி துணை தாளாளர் மனோஜ் குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை