உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிணற்றில் விழுந்த காட்டு பன்றி மீட்பு

கிணற்றில் விழுந்த காட்டு பன்றி மீட்பு

கூடலுார் : கூடலுார் அருகே, கிணற்றில் தவறி விழுந்த காட்டு பன்றியை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.கூடலுார் தர்மகிரி அருகே தனியார் காபி தோட்டத்தில் உள்ள 10 அடி கிணற்றில் காட்டு பன்றி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. தகவலின் பேரில், வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் சுபேத்குமார், அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள், வலையை பயன்படுத்தி, கிணற்றிலிருந்து காட்டு பன்றியை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்