மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
22 hour(s) ago
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி : ஊட்டி ஆஸ்பிட்டல் சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.ஊட்டி ஆஸ்பிட்டல் சாலையில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவ கல்லுாரியாக மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டதால் அனைத்து துறை மருத்துவர்கள் பணியில் இருப்பதால் மாவட்ட முழுவதிலிருந்தும் தினமும், ஏராளமான பொதுமக்கள் மருத்துவ பரிசோதனைக்கு வருகின்றனர். பலர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவ கல்லுாரி அந்தஸ்து என்பதால் மருத்துவ மாணவர்களும் தினமும் பயிற்சிக்கு வந்து செல்கின்றனர். மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஆஸ்பிட்டல் சாலையில் இருப்புறம் நிறுத்தப்படும் வாகனங்களால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் அவசர தேவைக்கு வரும் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இச்சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிக்க வேண்டும்.
22 hour(s) ago
03-Oct-2025